அஜித்தின் திருப்பதி படத்தில் சதாவிற்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தது இந்த நாயகியா?- தற்போது கூறிய இயக்குனர்

தமிழ் சினிமாவில் நல்ல நல்ல கமர்ஷியல் படங்களை இயக்கும் இயக்குனர்கள் அதிகம் இருக்கிறார்.அதில் 90களில் பல ஹிட் படங்களை கொடுத்து சாதித்தவர் இயக்குனர் பேரரசு. இப்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜித், விஜய்யை வைத்தும் படங்கள் இயக்கி ஹிட் கொடுத்துள்ளார்.

விஜய்யை வைத்து திருப்பாச்சி, சிவகாசி என இரண்டு ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அதேபோல் அஜித்தை வைத்து திருப்பதி என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இதில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை சதா நடித்து இருப்பார் லைலா ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டு செல்வார்.

அண்மையில் ஒரு பேட்டியில் இப்படம் குறித்து பேசும்போது பேரரசு, படத்தில் நாயகியாக சதா நடித்துள்ளார். ஆனால் முதலில் தேர்வானது நடிகை நயன்தாரா தான்.

அப்போது அவர் தெலுங்கு படம் ஒன்றில் பிஸியாக இருந்ததால் தேதி சிக்கலால் அவரால் நடிக்க முடியாமல் போனது என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

© 2022 News Vanni - WordPress Theme by WPEnjoy