கையில் Tripsவுடன் புகைப்படம் வெளியிட்ட ஷிவாங்கி- மருத்துவமனை புகைப்படம், ரசிகர்கள் ஷாக்

விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி படு பிரபலம். சமையல் என்பது நிகழ்ச்சியின் முக்கிய பங்கு என்றாலும் இப்போது காமெடி தான் அதிகம் உள்ளது.சமைப்பதை தாண்டி எப்படியெல்லாம் செய்தால் மக்கள் சிரிப்பார்கள் என்பதில் தான் போட்டியாளர்கள், கோமாளிகள் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள்.

இந்நிகழ்ச்சியின் மூலம் சூப்பர் சிங்கர் ஷிவாங்கி என்பதை தாண்டி குக் வித் கோமாளி பிரபலம் என மாறியிருக்கிறார்.

குக் வித் கோமாளி 3வது சீசனை தாண்டி ஷிவாங்கி நிறைய படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இப்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடைபோடும் டான் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் ஷிவாங்கி இன்ஸ்டா பக்கத்தில் ஒரு அதிர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவரது கையில் Trips ஏற்றியிருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு உடல்நிலை தான் முதலில் முக்கியம் என பதிவு செய்துள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் ஷிவாங்கி சீக்கிரம் குணமாக வேண்டும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

© 2022 News Vanni - WordPress Theme by WPEnjoy