செந்தில் கணேஷ்– ராஜலக்ஷ்மி ஜோடியின் திருமணப்புகைப்படத்தினை திருமண நாளில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கணவன், மனைவி இருவரும் கலந்து கொண்டார்கள்.பின் இந்த சூப்பர் சிங்கர் மேடையில் பல நாட்டுப்புற பாடல்களை பாடி மக்கள் மனதில் இடம் பிடித்தார்கள்.போட்டியில் செந்தில் கணேஷ் தன்னுடைய விடா முயற்சியால் வெற்றி பெற்றார்.
தற்போது இவர்கள் சொந்தமாக ஒரு ஸ்டூடியோ ஒன்றை வைத்து நடத்தி வருகின்றனர்.சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் இடம் பெற்ற ‘வாயா சாமி’ என்ற பாடலை தமிழில் ராஜலக்ஷ்மி தான் பாடி இருந்தார்.
புஷ்பா திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது. தற்போது இருவரும் இருளி என்ற படத்தில் நடித்து வருகிறார்கள்.இப்படி இவர்கள் இருவரும் சினிமாவில் பிசியாக இருந்தாலும் எப்போதுமே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்கள்.
இவர்கள் தங்களின் 10ஆம் ஆண்டு திருமண நாளை நேற்று கொண்டாடியுள்ளனர். தங்களின் திருமண புகைப்படங்களை செந்தில் கணேஷ் பகிர்ந்துள்ளார்கள். இதனை பார்த்த ரசிகர்கள் இது நம்ப செந்தில் – ராஜலட்சுமியா என வாயடைத்து போயுள்ளனர்.